RSS

வாட்ஸ்அப்’பில் வந்த கவித்துளிகள்

17 Nov

ஏதோ தமிழன்கிறோம், போராடுறோம்,ஆனா ரீசார்ஜ் கடையில நம்பர் சொல்லுங்கனு சொன்னதும் 10 நம்பர தமிழ்ல சொல்ல திண்டாட ரோம்

எதிர்காலத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் தேவைப்படலாம்…

பள்ளியில் பாடத்தில் ஏமாற்றலாம் கடைசி பக்கம் விடையை பார்த்து…. ஆனால்.,
வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. இறுதி பக்கமே தெரியாது. !

கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !

அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை!

படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

விவசாய நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்து காசு பாத்தோம்.
இப்போ விலைவாசி ஏறிப்போச்சு.
இனி பிளாட்டை விற்று பருப்பு வாங்கும் நிலைகூட வரும்.!

பென்சில் ஷார்ப்பனரை எல்லாம் ஆயுதமாக்கிய பெருமை இந்த சரஸ்வதி பூஜையைத்தான் சேரும் !!

எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.ஜெயிக்கிறதுங்கிறது வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி சொத்தாகவும் உள்ளது.

பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))

தெருவை கடந்தேன் ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை கடந்தேன்  ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன் இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே இந்தியன் ஆனேன்!

குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது

காலையில வாக்கிங் போரதல கெடச்ச ஒரே நன்மை தெருநாய் எல்லாம் தோஸ்த்ஆனது தான்.. இப்பெல்லாம் நைட் லேட்டா வந்தாலும் நம்மள பாத்து குலைக்கிறதில்ல!

கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்…!
உண்மைதான்…!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்…!
கூகுளே கிடைக்காது.!

உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?

தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!

***விலைவாசி – பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !

*’ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

*விமர்சனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.!
**-உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!

****இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா” என ஆரம்பித்து…
“இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா” என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !

***வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

***என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். ..! (ஆணின் முதல் தியாகம்)

***ஒரு முதலாளியை ”வேலையை விட்டுட்டு போயிடுவேன்”னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !

***தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை !!
**அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?…அதுதான் கடவுள்.

***இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!

**500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை

***அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

***சொகுசு பேருந்து என்பது பெரிய சைஸ்
“ஷேர் ஆட்டோ”!

***என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!

**இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!….நிதர்சனம்

**சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !

***இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐

***வாட்ஸாப்ல “Hey there iam using watsapp”ன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்குறவன் தான் உண்மையில யூஸ் பண்ணாதவன்.

***சிலர் நம் பெயரை அழகா வித்தியாசமா கூப்பிடுவதால் அவர்களை அதிகம் பிடிக்கிறது.

***வெளிநாட்டில் வேலையில் இருக்கும் மகனுக்கு தன் பெற்றோர் கூட தூரத்து சொந்தம் தான் 😐

***இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

***250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்…!!

**மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்…!!!

***தூக்கம் வராமல் முதலாளி…
தூங்கி வழியும் வாட்ச்மேன………முரண்.

**கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

**கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

**ஒரு ஆண் 25 வயதுக்கு மேல் எடுக்க போற ஒவ்வொரு முடிவும் தீப்பெட்டியில் உரசும் கடைசி தீக்குச்சியை போல அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.!!

**கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க போறதாலதான் அதுக்கு L”KG”…. U”KG”…னு பேருபோல…
😐
***நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைக்கும் ஒவ்வொன்றுமே, என் முந்தைய தேடுதலில் கிடைத்திருக்க வேண்டியவைகளாகவே இருக்கின்றன!

***கொட்டும் “மழையில்” இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க😅
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா🚶🚶

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: