RSS

Category Archives: Public Diary

போகியில் புதுமை

போகியில் புதுமை

வந்தாள் பதுமை புதுமையை தந்திட

தேர்மேல் தேவதை போகியை கொண்டாட

துன்பங்கள் எரிந்தது பழையன போல

இன்பங்கள் புகுந்தது புதியன போல

என்றும் என்றேன்றும்

வாழ்வு சிறக்க வாழ்க வளமுடன்

அன்பு மகளே !!!

வலிகள் ஜீரணித்து வேதனை மறைத்து

அண்டத்தில் அன்புக்கு அடைக்கலம் கொடுத்து

பிண்டத்தை அண்டத்தில் உயிரோலியாய் அளித்து

முதலாம் மூன்றில் உணவை மறந்து

இரண்டாம் மூன்றில் தூக்கம் விடுத்து

மூன்றாம் மூன்றில் தன்னுடல் வருத்தி

இறுதியில் உயிரையே வலியாய் கொண்டு

முதலாம் மூச்சுக்கு வழிவகை செய்து

தேவதையை வரவேற்ற

தியாகமே!! தெய்வமே!! பெண்ணியமே!!

அன்பு மனைவியே !!

வாழ்க வளமுடன்…

Advertisements
 

Tags: , , , , , , , , , , , , , ,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாயே

அன்பு கொண்டு 👱‍♀
ஆனந்தம் பொங்கும் 😁
இன்பமயமான அம்மக்காவே😉
ஈகை குணம் கொண்ட🤝
உண்மையாக 🙏
ஊர் உலகம் அறிந்த 🏕
எங்கள் தாயே ❤
ஏணியாய் நின்று 🌱
ஐயம் இன்றி 💐
ஒற்றை மனிதியாய் 🙅
ஓடமாய் நின்று கரை கண்டாயே🛥 
ஓளடதமாய் நீயிருந்து எங்களை ☕
எஃகாய் மாற்றினாய் 💪
நன்றி 🙏 தாயே 🙏 நன்றி 

✍ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாயே 👩🏻

 

Tags: , , , ,

மழழை

விதைத்தவனுக்கு பாராட்டுக்கள்

விளைவித்தவளுக்கு வாழ்த்துக்கள்

விளைந்தவருக்கு முத்தங்கள்

விதித்தவனுக்கு நன்றிகள்
(என் நண்பன் சிலம்பரசனின் அண்ணனுக்கு பிறந்த குழந்தைக்காக 18 July 2017 எழுதியது)

 

முதல் படி

12”ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி குறிப்பேட்டில் கடைசி பக்கங்களில் எழுதிய சில பதிவுகளை இங்கே பதிப்பதில் மகிழ்கிறேன்.

$$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

படிப்பு

ஒவ்வொருவரின் வாழ்விலும்

முதல் படி !

புத்தகத்தின்

எதிர்முனையில் “படி”யெனில்

பாழாய் போகும் “படி”ப்பு !

*** அட, அட, அட, தத்துவத்த பிழியுறான்யா ***

$$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

விளையாட்டாய்

பொழுதை கழிக்க விரும்பாத

விமர்சகர்களுக்கும் ;

படிக்க முடித்தும்

படிக்காதவர்களுக்கும் ;

சப்தமில்லாமல்

சலனமில்லாமல்

புத்தகத்தை திருப்பி

மூளையை வளர்க்க

ஆயிரமாயிரம் நூல்களை

அடுக்கி வைத்துள்ளது

நூலகம் !

ஒருமுறை வாயேன் என் வருங்காலமே !

$$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

காணும் உலகம் உன் கண்முன்

பிறகேன்

வாழ நடுக்கம் !!

வாழ்க்கை யாருக்கும்

வாழ தடை சொல்வதில்லை !!

ரகசியங்கள் பாதுகாக்கப்படலாம்

லட்சியங்கள் ???

$$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

படைத்த வன்சில குறிப்பு

வடித்தி ருக்கஅ தன்படி

கிடைத்த வன்பல அனுபவிக்

கிறானெ னவே நான்கூற

தடையில் லாவுலகை யுருவாக்

குவமே யென்று ஒன்றுசேர

எடைமிகு வீரமாய் இளைஞர்

பலர் வரவே வெற்றி !!!

*** இரண்டாம் எழுத்து ஒன்றாய் அமைந்த மரபுக்கவி எழுத சிறுமுயற்சி ***

$$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

* இளைஞனின் ஏக்கம் *

உண்மை கூறதயக்க மில்லை

     எந்த பிறவியிலும் தான்;

கண்முன் நடக்கும் அநீதிக்கு

     தீர்வு கேட்டுநா நலைந்தேன்;

யாரையென் றுகேட்டீரோ அவரே

     இவ்வூர் மேன் மக்கள்;

தேரையே தந்தான் பாரி,

     தீர்ப்பு இல்லை இவ்வூரில்.

ஊரை விட்டு ஓடலாம்

     உண்மை வாழ்வு வாழவே;

தாரைத் தாரையாய் கண்ணீரே

     ஊரை விடும் ஏக்கமோ?

இனிதான் உலகை உருவாக்க

     முனைந்து நின்று படவேண்டும்;

இனிமை கிடைக்கும் அதன்பின்னே

     துன்பம் போக்கி சிரிப்போம் !!!

*** இரண்டாம் எழுத்து ஒன்றாய் அமைந்த மரபுக்கவி எழுத அடுத்த முயற்சி ***

$$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

இறப்பு மனிதனின் பிறப்புரிமை, எய்ட்ஸ் ???

$$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

வாழ்வை முடிக்க

மனமின்றி

நாளை முடிக்கும்

மனிதரிடை

வாழும் மனிதனாய்

நானிருக்க விரும்பவில்லை !!!

தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்.ரா

This work is licensed under a Creative Commons license.
 

என் அவள்

ஓவியம் தீட்டிய

தூரிகை

அவள் புன்னகை !

காவியம் கூறும்

கவிதை

அவள் பார்வை !

அவள் சுவடுகள் பதித்து சென்றது

பாதையில் இல்லை

என் மனதில் !

ஒரே ஒரு பார்வை

எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் !

வெறும் கண்ணசைவுக்கு

கலவரப்படுத்தும் சக்தி !

இத்தனை நடந்தும்

பார்வைக்காக

பாதம் தொடரும் நான்…

தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்.ரா

This work is licensed under a Creative Commons license.
 

வழிதோறும் வெற்றி…

கவலைகளின் கவன்கண்டு
கண்ணீரை பெற்றவனே ,

கண்ணீரின் சுவைகண்டு
கடலிலே கலந்தவனே ,

உதயம் பூக்கும்போது
உறக்கம் கொண்டவனே ,

பிறப்பின் போதே அழுதுவிட்டாயே , இன்னும் ஏன் ?
போதும்…  அலுத்துவிட்டது…

உறங்காத உன் கனவுகளுக்கு
உருவம் கொடு…

வெறும் கனவுகளை
வெற்றி படிகளாய் மாற்று…

விழியோடு காத்திருப்பு…
வழிதோறும் வெற்றி…

உன்னை வெல்ல உலகம் காத்திருக்கிறது; கவலை படாதே ,
நீ வெல்ல உலகமே இருக்கிறது…

 

இளைஞனின் லட்சியம்…

பூமாலை கூட
மாலை வருமுன் வாடிவிடும் ;
இச்சை மறந்து
உண்மை லட்சியம் கொண்ட நெஞ்சம்,
வாடுவதும் இல்லை !!
உதிர்வதும் இல்லை !!

வாழ்க்கை
வாழ்ந்து பார்க்கவே !
வீழ்ந்து
வானத்திலிருந்து பார்க்கவா ?

இல்லவே இல்லை…

விடியல் உனக்காக … சூரியனே எழுந்து வா…