RSS

Category Archives: School Days

பொங்கல் – கொண்டாட்டம்

பள்ளி தோழர்களுடன் 2012ம் ஆண்டு பொங்கல் நிறைவாய் நிறைவடைந்தது.

பொங்கல் தினத்தை பற்றிய ஒரு சின்ன அலசல்…

PONGAL (24)

காலை வீட்டின் பொங்கலை கொண்டாடிவிட்டு ஒன்பது மணியளவில் வேளச்சேரி புறப்பட்டேன். வழியில் பொங்கலை கோலங்கள் தெருவை அலங்கரித்திருந்தது.

PONGAL (1)

PONGAL (3)

வேளச்சேரியில் கொஞ்சம் காத்திருப்புக்கு பின் ஆதித்தன் தன் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்தான். அவனுடன் தி.நகர் நாராயணர் கோயிலுக்கு பயணம். (ஆதித்தனுக்கு கோயில் நிர்வாகத்துடன் எதோ வேலை இருந்ததால் அங்கு சென்றோம்).

PONGAL (7)

அப்படியே தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரவீன் அறைக்கு சென்றோம்.

அறையில் வழக்கமாக தங்கி மற்றும் தாங்கி நிற்கும் ஊர்தலைவர் இதயகுமார் அவர்கள் தங்களது அலுவல் காரணமாக நைசாக பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

sanmugaidhyam

அதே போல பொட்டல்காட்டை ஊராக மாற்றி அதை உலகம் என்று சொல்லை ஊரை ஏமாற்றிகொண்டு இருக்கும் அண்ணன் சண்முகசுந்தரம் அவர்களும் ஊருக்கு சென்றுவிட்டார்.

இப்பொது அறையில் மிஞ்சி இருப்பது பிரவீன், மோகன் மட்டுமே. அவர்களை அறைக்கு சென்றடைந்த போது அங்கே நசீர் அவர்கள் வந்து விட்டார். (ஆச்சரியம், ஆனால் உண்மை)

PONGAL (40)

பின் பிரவீன் அவர்கள் பொங்கல் பொங்கும் சிறப்பான வேலையை ஆரம்பித்தார். இனிதே பொங்கல் பொங்கியது. இறைவனுக்கு படைத்தோம். நாங்களே சாப்பிட்டோம்.

PONGAL (8)PONGAL (9)PONGAL (10)PONGAL (12)PONGAL (13)PONGAL (14)PONGAL (15)PONGAL (16)PONGAL (30)PONGAL (31)

பொங்கல் வயிற்றில் தஞ்சம் புகுந்ததும் மதிய உணவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் மும்முரமாய் நடைபெற்றது.

ஒரு வெங்காயத்தை உரிக்க பட்டபாடு எனக்குதான் தெரியும் என்று புலம்பிய படி நான் இருக்க, அம்புட்டு வெங்காயத்தையும் அரை நொடியில் வெட்டி எறிந்தான் பிரவீன். காதலியின் விரல்நகத்தை வெட்டுவது போல தக்காளியை கொஞ்சி கொண்டிருந்தான் மோகன்.

இப்படியாக போய்கொண்டிருக்கும் போது கல்குறிச்சி சிங்கம் முருகராஜா அவர்கள் அறைக்கு வந்தார். இவரை தொடர்ந்து என் கல்லூரி நண்பன் , வாலிபால் கேப்டன் பிரவீன் அவர்களின் பள்ளி எதிரி ரவிபாலன் அறைக்கு வந்தான். ( பொண்ணு கைய புடிச்சி இழுதியா, என்ன கைய புடுச்சி இழுதியா)

PONGAL (41)

மதியஉணவு தயாரானது. உணவுக்கு பின் நண்பர்கள் அனைவரும் 35வது புத்தக திருவிழாவுக்கு செல்ல தயாரானோம்.

தங்க கம்பி மோகன் அவர்கள் வர மாட்டேன் என்று முதலில் அடம் பிடித்தார். பின்பு நாங்கள் அனைவரும் வற்புறுத்திய காரணத்தால் கோபத்தில் ஊர்தலைவர் இதயகுமார் பஞ்சாயத்துக்கு போவதற்காக மடித்து பத்திரமாக வைத்திருந்த அவரது துணிமணிகளை தூக்கி எறிந்தார். அவரை எப்படியோ சமாளித்து சம்மதம் வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. (எனக்கென்னமோ உம்மேலதான் சந்தேகாமா இருக்கு…, பெருசு இந்த பஞ்சாயத கலைக்க பட்டபாடு எனக்குதான் தெரியும்,தேவையில்லாம சிறுத்தைய சுரண்டி பாக்காத.. போ.போ…போ… )

PONGAL (42)PONGAL (43)PONGAL (44)PONGAL (45)

பச்சையப்பா கல்லூரி எதிரில் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் புத்தகவிழாவுக்கு வந்தடைந்தோம்.

PONGAL (46)

உள்ளே சென்று புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டு இருக்கும் போது தோழர் நிருபன் அவர்களை எங்களுடன் இணைந்தார். நானும் நிருபனும் சுற்றய சுற்றில் இரு திரைப்படங்களும் ஒரு புத்தகமுமாய் வெளியே வந்தோம்.

PONGAL (52)

(இவுரு எப்பவுமே இப்படி தான் போஸ் குடுப்பாரு, பயபாடாதீங்க)

மற்றவர்கள் எங்களுக்கு முன்பாகவே வெளியே நடைபெற்றுகொண்டிருந்த வினாடிவினா போட்டியில் கலந்து கொள்வதற்காக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதன் மூலம் ஆதித்தனை மேடைக்கு செல்ல அழைத்தனர். மேடைசெல்லாமல் இருந்ததால் ஆதித்தனுக்கு பதிலாக நான் மேடைக்கு ஆதித்தன் என்ற அடையாளத்தோடு சென்றேன்.

பதில் தெரியாத கேள்விகளுக்கு கூட்டத்தோடு கோவிந்தா போட்டு ஒரு ஆடை ஆறுதல் பரிசாக பெற்றேன். ( இதெல்லாம் ஒரு பொழப்பு )

PONGAL (53)PONGAL (54)PONGAL (55)PONGAL (56)

மோகனின் நண்பன் ஒருவன் அறைக்கு வந்திருப்பதாக வந்த செய்தியால் மோகன் அறைக்கு சென்று விட்டான். பின்பு ஏனையவர்கள் அனைவரும் சென்ற இடம் ஸ்கைவாக்.

PONGAL (58)

பிரமாண்டமான பொங்கல் பானை வரவேற்றது. சும்மா சுற்றி பார்த்துவிட்டு கே.எப்.சி.குள் நுழைந்தோம். ஆதித்தனும் நசீரும் ஸ்பான்சர் செய்ய, பொங்கல் அதுவுமாய் சில கோழிகளின் கால்களை விழுங்கினோம். அரை நொடியில் ஆயிரம் ரூபாய் ஏப்பமாய் போனது. # கழுத விடு, ஒரு நாளைக்கு தானே…

PONGAL (57)

மறுநாள் முதல் இயந்திரமாய் அலுவல் தொடர அவரவர் வீட்டுக்கு சென்றோம்.  இவ்வாறாக பொங்கல் தினம் இனிமையாக நிறைவுக்கு வந்தது…

:: பொங்கல் கொண்டாட்டத்துக்காக செல்லும் வழியில் கிளிக்கியவை ::

பொங்கல் அன்று மட்டுமாவது பசிக்காமல் இருந்தால் இவர் யாரோ ஒருவரது வீட்டு வாசலில் தன் பொங்கலை கொண்டாட காத்திருந்திருக்க மாட்டார்.

PONGAL (2)

சூரிய பகவானிடம்  ஆசீர்வாதம் வாங்கியபடி பொங்கலை தன் கனவில் கொண்டாடி கொண்டிருக்கும் வேளச்சேரி மூதாட்டி,

PONGAL (4)PONGAL (5)

பொங்கல் அன்றும் நான் ஒரு கவர் அமெளண்ட் எம்ப்ளாயி தான். #பேருந்து ஓட்டுனரின் பொங்கல்

PONGAL (6)

பொங்கலில் எடுத்த அனைத்து நிகழ்படங்களையும் பார்வையிட ::  இங்கே.

அனைத்து நிழற்படங்களை பார்வையிட ::  இங்கே அல்லது இங்கே.

தீராத நட்புடன்,

பூபால அருண் குமரன் ரா

Advertisements
 

விடியல் – கவிதை

விடியல் என்ற தலைப்பில் நம் நண்பன் நிரூபன் பன்னிரண்டாம் வகுப்பில் எழுதிய கவிதை தான் இது.

 

niru_

இந்த கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மனம் உடை(க்கப்)பட்ட நிலையில் எழுதப்பட்டது.  கவிதையின் ஆரம்பத்தில் இதயம் உலகை பிரிய தயாராகி கொண்டு இருக்கும் மனநிலையும் போக போக உலகத்தை ஆள மனம் தயாராகிக் கொண்டு இருக்கும் மனநிலையும் கலந்து இருக்கும்.

பள்ளியில் நடந்த ஒரு சின்ன ( அந்நேரத்தில் அது பெரிய ) பிரச்சினை காரணமாக ஆசிரியர்களிடம் கொஞ்ச மன வருத்தம், “கோழையாய் அழுகிறாய் நீ “ என பேச்சு. தோழிகளே பார்த்து சிரித்தது (அதுக்கு பயபுள்ள முறைச்சு பாத்து மிரட்டிட்டான் – அது வேற கதை)  அப்படி இப்படி என மனம் உடைந்த நிலையில் வீடு சென்ற நிரூபன் மறுநாள் என்னிடம் இந்த கவிதையை நீட்டவும் “கட முடா கட டன் டங்” என பெருத்த சத்தத்துடன் “உருண்ட” வகுப்பில் பாடம் எடுக்க உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

நிச்சயம் இந்த கவிதையாய் நான் மிகவும் ரசித்தேன். இன்னும் அவன் கொடுத்த கவிதை என்னிடம் பொக்கிஷமாய் ( பிரவீன், இது வேற பொக்கிஷம்)  இருக்கிறது.

இதோ அந்த கவிதை நம் நண்பர்களுக்காக சமர்பிக்கிறேன்.

விடியல்

sunshine1

என் மனசு கனத்தது

என் டைரி நனைந்தது.

பொங்கியது கண்ணீர் மட்டுமல்ல கவிதையும் தான்.

தலைவலியும் காய்ச்சலும் வந்தாலதான் தெரியும்.

தற்கொலையின் அவசியம், அந்நிலையில்தான் புரியும்.

நான் கூட அவர்களை பார்த்து சிரித்ததுண்டு,

நேற்று வரை…

 

தவிலுக்கு இருபக்கம் அடி,

ஆனால் எனக்கு…

 

அதிகமாய் சிரிப்பவர்கள் ( சிரிப்பதுபோல் காட்டிகொள்பவர்கள்)

அதிகமாய் வருந்தினவர்கள்.

இவர்களுக்கு, புன்னகை உதடுகளில் மட்டும்

வெடிச்சிரிப்பு வாயில் மட்டும்.

 

பெருஞ்சோகத்தால் மனசு வெடித்துவிட கூடாதென்று

பெருஞ்சிரிப்பு சிரித்து உதடு வெடித்தவர்கள்.

அவர்களில்…. நானும் ஒருவன்.

 

நான்கு பக்கமும் அடைபட்ட தண்ணீர், வேறு வழியின்றி

வானுக்கும், பூமிக்கும் பாய்வதுபோல்

நானும் போகிறேன்… போகிறேன்…

sad

பிரச்சனைகளுக்கு தற்கொலை மட்டும் தீர்வல்ல

தற்கொலையும் ஒரு தீர்வு.

 

ஒரு ஆண் அழுதால்

அது அவனது கொலைத்தனத்தை காட்டுகிறது என்பதல்ல.

அவனது சோகத்தின் அளவை காட்டுகிறது.

 

என் கண்கடலில் சுனாமி !

திடீரென்று ஏற்பட்ட வெள்ள கண்ணீரால்.

கன்னக் கரைகள் தடுமாறியது உண்மை.

தலையணை நாட்டிற்குள் க(த)ண்ணீர் நுழைந்தது உண்மை.

 

—–     ——-        ——      ——-             ———-                    ———

————              —————–               —– –              ———

—    —-   —-    —-                       ————————             ————

 

வெறுமை கூட அழகுதான்.

வெளிப்படுத்த இயலாத வார்த்தையே மெளனம் ஆகிறது.

வார்த்தைக்கு பொருளுண்டு.

மெளனத்திற்கு ? …

 

அழுதேன், … அழுதேன். ..

கண்ணீர் முடியும் வரை அழுதேன்

கிழக்கு விடியும் வரை அழுதேன்

 

woman-tears1

 

கண்டு கொண்டேன் , கற்றுகொண்டேன்.

மணிக்கணக்கில் அழுதாலும், வற்றாமல்

ஊ(ற்)றுகின்ற கண்ணிடமிருந்து

“ முயற்சியை கைவிடாதே ”  என்பதை கற்றுகொண்டேன்.

 

என்னை விட  என் கண்ணீர் சுரப்பி

தன்னம்பிக்கை மிக்கது என்பதை கண்டுகொண்டேன்.

தங்கத்தை சுட்டு இளக்கும் தீக்கு தெரியவில்லை

நாம் அதை அழகாக்குகிறோம் என்று.

என்னை அழவைப்பவர்களுக்கு தெரியவில்லை,

என்னை ஆயத்தப்படுத்துகிறார்கள் என்று.

 

கற்று கொண்டேன் !

என் மீது எறியப்படும் கற்களை கொண்டு

மாளிகை கட்டும் வித்தையை !

 

என் மீது எய்தப்படும் அம்புகளை கொண்டு

பல்இடுக்குகளை தூய்மைபடுத்தும் கலையை !

 

உயிர் துறக்கும் எண்ணத்தை துறந்தேன்.

விளக்கு எரிய எரிய இருள் விலகுவதுபோல்

மனது தெளிய தெளிய கவலை விலகியது.

 

சரி !

இனியாவது தூங்கலாம் என்று நினைக்கும்போது

சேவல் கூவும் சத்தம் !

 

போ !

கவலையில் ஓர் இரவு கழிந்திருந்திருக்கிறது.

 

அன்றொருநாள் “மனதில் உறுதி வேண்டும்”

என்று கூவிய குயிலின் குரல்

அடிமனதில் இன்னமும்.

hope

விடிந்துவிட்டது !

கிழக்கு மட்டுமல்ல –

என் வாழ்வும் தான்…

 

என்றும் நட்புடன்,   உங்கள் நண்பன்…

 

நட்பு வட்டம்_சந்திப்பு

சென்னையில் வசிக்கும் நண்பர்கள் சந்தித்து பலநாள் ஆகிய நிலையில் 8-5-2011 அன்று சந்திக்கலாம் என் முடிவெடுத்தோம்.

சென்னையில் வசிக்கும் அனைத்து நண்பர்களையும் அழைக்கலாம் என்று அனைவருக்கும் செய்திகளை பரப்ப தொடங்கினோம்.

நான் முதலில் நிருபனிடம் கேட்டேன். அவன் சரி என்றதும், பிரவீன் மற்றும் சண்முகசுந்தரதிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி அவர்களிடமும் சம்மதம் பெற்றதும், சந்திப்பு உறுதியானது.

நண்பன் சண்முகசுந்தரம் ஏனைய நண்பர்களான மோகன், வெங்கடேஷ், சண்முகநாதன் ஆகியோரிடம் சம்மதம் வாங்கினான். பின்பு இதயகுமார் அவர்களிடம் தோழன் பிரவீன் சம்மதம் வாங்க அலைபேசியில் அழைத்த போது அங்கே நடந்த உரையாடல் :

பிரவீன் :: ஹலோ , துபாயா என் தம்பி மார்க் இருக்கானா ?

இதயகுமார் :: நான் இதயமார்க் தான் பேசுறேன்.

பிரவீன் :: ஓ. நீ தான் பேசுறியா ? நம்ம நண்பர்கள் எல்லாரும் மீட் பண்றோம். நீ வரியா இந்தியாவுக்கு?

இதயகுமார் :: “இல்ல பிரேவ்ஸ், இங்க ஒரே பிரச்சனை. போன எடுத்தா நச்சு நச்சுன்னுரானுங்க, ஏதோ பொண்ணுக்கு கல்யாணமாம். அத MLA”வாலே சாதிக்க முடியலாம். என்ன சாதிக்க சொல்றானுங்க. அட இது பரவாயில்ல சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம். டைவர்ஸ் கேஸ்’லாம் என்கிட்ட வருதுப்பா. நான் என்ன கோர்ட்டா இல்ல வக்கீலா ? ஒரே குஷ்டமப்பா?

பிரவீன் :: குஷ்டமா ?

இதயகுமார் :: இது, கஷ்ட்டமப்பா…

பிரவீன் :: “போதும்டா சாமீ, ரீல் அந்து ஒரு வாரம் ஆச்சு…

இதயகுமார் :: ஹி.. ஹி.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

பிரவீன் :: ஓகே, அப்படின்னா நாங்க …………..

இப்படியாக இதயமார்க் தான் வர முடியாத காரணத்தை விவரிக்க அலைபேசியில் காசு இல்லாத காரணத்தால் தொடர்பு துண்டானது.

நான் கேசவனுக்கும் பரமலிங்கத்துக்கும் விபரங்களை கூறினேன். கொய்யால ரெண்டு பேரும் கோடைன்னு சொல்லி ஊருல கொடைன்னு கிளம்பிட்டாய்ங்க…

இவங்கலாவது பரவாயில்ல. நேர்மையா வரலைனு சொல்லிட்டானுங்க. இன்னும் ஒருத்தன் இருக்கான் : நசீர். வரேன்னு சொல்லி கடைசி வரை வரவே இல்லை.

கீழ இருக்குறதுல இடப்பக்கம் இருப்பவர்தான் கேசவன். வலப்பக்கம் இருப்பவர் நசீர். ( பச்சை குழந்தையோட பால்வடியுற முகத்தை பாருங்க )

“வருவேன் . ஆனா வர மாட்டேன்” என்று காமெடி பண்ணிட்டான்.

அப்புறம் ஆதித்தனை அழைத்தேன். அவனுடைய வேலைப்பளு காரணமாக வர முடியாத சூழ்நிலை அவனுக்கு. இருந்தாலும் முயற்சி செய்கிறேன் என்றான். ஆனால் வரமுடியவில்லை.

நான் ராம் டெண்டுல்கரை அழைத்தேன். அவன் ஊரில் இருப்பதால் அடுத்தமுறை பார்க்கலாம் என்றான்.

ஒரு வழியாக மதியம் இரண்டுமணி அளவில் Express Avenue”வில் நானும் நிருபனும் சந்தித்தோம். பின்பு சண்முகசுந்தரம், பிரவீன், மோகன், வெங்கடேஷ் ஆகியோர் வந்தனர்.

:: பார்க்க ::

கால்கடுக்க சுற்றிய பின் மதியம் மாலையாகிக் கொண்டிருந்த சமயத்தில் சண்முகநாதன் மற்றும் சங்கர் இருவரும் வந்தனர்.

நன்கு சுற்றி கலைத்துபோய் மாலை ஆறு மணிக்கு வெளியே வந்தோம். சங்கத்தை கலைக்க அல்ல. அவென்யுன் ஒரு வாசலின் முன் அமர்த்து சற்று களைப்பாறிவிட்டு ஏழு மணியளவில் விடைபெற்றோம்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக சென்னை மெரீனாவில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் ஊர் பெரியவரான இதயகுமார் கலந்துகொண்டார்.
அங்கே எடுக்கப்பட்ட ஒரு புகைப்பட தொகுப்பு :: இங்கே ::

27 – 3 – 2011 அன்று நானும் நண்பன் டல்ஹௌசி பிரபுவும் சந்தித்தபோது நிழலான சில புகைப்படங்கள் :: இங்கே ::

நன்றி மீண்டும் சிந்திப்போம்.

என்றும் நட்புடன்,
பூபால அருண் குமரன் . ரா
 

பயணமும் நண்பர்களும்…

நான் எப்ப  ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல)

அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு…
( குறிப்பு : வெங்காயம்  சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது )

இவர்  தான் விக்னேஷ் குமரன் என்ற விக்கி,

திசையன்விளைல வளர்ந்து நிக்குற கட்டிடங்கள் எல்லாத்தையும் கட்டினது நான்தான்’னு  வருங்காலத்துல சொல்ல இப்பவே பாடுபட்டு கொண்டு இருக்கும் ஒரு ஜீவன். இப்பக்கூட அது விசயமா தான் பைக்ல போறாரு.

“நீ  போயிட்டு வா தல , அப்புறம் பாக்கலாம்”…

அடுத்தது என் ஆருயிர் நண்பன் கேசவன் (நாராயண கோவிந்தா கோ…விந்தா)

என்ன ஒருத்தரும் இல்லன்னு பாக்குறிங்க. கடைல வேலை இருக்கும் போது போஸ் குடுக்க முடியாதுல்ல… இப்ப வந்துடுவார் …

இதோ வந்துட்டார். சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. மறைக்குது…

தேங்க்ஸ் சார். பாருங்க புள்ளைய எம்புட்டு அழகா கணக்கு பாக்குதுன்னு.
இவர் மூணு ஈ முடிச்சிட்டு அப்பாவுக்கு துணையா கடைல கணக்கு எழுதுறார்.
மூணு ஈ”ன்ன ”EEE” ங்க.

இவரோட ஒரே ஆசை டைடானிக் கப்பலுக்கு கேப்டன் ஆகுறதுதான். ஜேக் பயலோட கிரகம் சரியில்லாம மொத்த கப்பலும் கடலுக்குள்ல போனத கேட்டுட்டு மனசொடிஞ்சி போயிட்டார். அதனால அந்த ஆசைய கை விட்டுட்டார். ஆனாலும் வேலை பார்த்தா,  கப்பல்ல தான் வேலை பார்ப்பேன்னு ஒத்த கால்ல நிக்குறார்.

அடுத்து  டல்ஹௌசி பிரபு..
இவங்க  தாத்தா சுதந்திர போராட்ட தியாகி”னு இவன் சொல்லி தான் இவங்க தாத்தாவுக்கே தெரியும். அந்த அளவுக்கு நல்லவன்.

இவனோட சிரிப்புல மயங்காத பொண்ணுங்களே கிடையாது.( ஓ.. இது தான் அழகுல மயங்கி விழுறதா )

இவனுக்கு  இருக்கும் பல வேலைகளுக்கு நடுவுல திருநெல்வேலி  ரயில் நிலையத்துக்கு வந்து வழி அனுப்பி வச்சாங்க. உண்மையிலேயே பாசக்கார பய…

Extra Fittings :::
இது தான் எங்க ஊர்ல இருக்குற ஒரே ஒரு தியேட்டர்… கணேசன் டாங்கீஸ்  , சாரி டாக்கீஸ்…

ஜூம் பண்ண கூடாது…
 

நந்தனார் நாடகம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுவிழாவுக்காக இறைவன் சிவபெருமானின் தொண்டர்களில் ஒருவரான நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்தோம்…நாடகத்தின் பெயர் ” பக்தனின் பெருமை
அதில் ஒரு காட்சி நிழல்படமாக,


ஆதித்தன், செல்வ கணேசன், சண்முகவேல், கேசவன், நான்(பூபாலன்).
நான் தாங்க நந்தனார்…பல காமெடி நடந்ததுங்க இந்த நாடகத்துல…

இந்த  நாடகத்தை அரங்கேற்ற பெரிதும் உதவியது எங்கள் தமிழ் ஆசிரியை திருமதி.சிவகலை.

இந்த நாடகத்துல என்னுடைய முதல் வசனம் :
( காட்சி – 1   , இடம் : ஆதனூர்   , நந்தனாரும் நான்கு அடியார்களும் )
நந்தனார் : ” செய்தொழிலே சிவன் தொழில். சிவனை எண்ணி எத்தொழில் செய்தாலும் அது சிவனுக்குரியதாகிறது. சிவனை மறந்து செய்யும் தொழில் இழிதொழிலாகிறது.”

எப்படி வசனம் ஞாபகம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது…

நந்தனாரின் வசனம் கொண்ட குறிப்புகள் என்னிடம் உள்ளது. நாடகத்தை வீடியோ எடுக்கவில்லை என்பது சின்ன வருத்தம்.

“நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்று பலர் கூற கேட்டு இருப்பீர்கள். ஏன் ,  உங்களையும் பலர் அப்படி கூறி இருக்கலாம்…

நந்தனார் சிவபெருமானின் தொண்டர்.63 நாயன்மார்களில் ஒருவர்.
தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் நந்தனாருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.ஆகவே  வாசலில் நின்றே கும்பிட்டுவிட்டு சென்று விடவேண்டும். சிவபெருமானின் முன்னால் உள்ள நந்தி சிவபெருமானை பார்க்க விடாதபடி மறைத்துக்கொண்டு  இருந்தது. ( இதுதான் “நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்பதன் பொருள் ).
நந்தனார் சிவபெருமானை காண முடியாததால் நந்தியை சற்று நகரும்படி சிவனை நோக்கி பாடல் ஒன்று பாடுவார். நந்தி நகர்ந்து சிவபெருமான் காட்சி தருவார்.

நந்தனாருக்கு திருநாளைப் போவார் என்றும் அழைப்பார்கள். நந்தனாரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ::: இங்கே


நந்தனாரின் வரலாற்றுத் திரைப்படத்தில் சில காட்சிகள் :
1. நந்தனார் சிவபெருமானை வணங்கும்படி அறிவுறை கூறும் காட்சி( அற்புதமான வரிகள் ) ,

2. பிற உயிர்களை கொல்ல கூடாது என்று மக்களுக்கு அறிவுறை கூறும் காட்சி ,

நந்தியை சற்று விலகி அமரும்படி கூறும் பாடலை காண ::: இங்கே

நாடகத்தில் முடிவில் நந்தனார் தீயில் இறங்கி உயிருடன் வெளியே வந்து  தன் பாவங்களை போக்கிகொள்வார். பின்பு “” ஹர ஹர மஹா தேவா ! சம்போ சதாசிவா ! பரமானந்தம் அடைந்தேன். யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருவதாகுக .. வாருங்கள் , அனைவரும் ஆலயத்திற்கு சென்று சிதம்பரநாதனை சேவிப்போம் “” என்று நந்தனார் கூறியவாறு நாடகம் நிறைவடையும்.

நன்றி…

 

Farewell Photo”s

உயிரில் கலந்த நட்பை

உலகம் நினைத்தாலும் பிரிக்க முடியாது…
உணர்வில் கலந்த நட்பை
உயிரே பிரிந்தாலும் மறக்க முடியாது…

சின்ன  ஞாபகமாக இருக்கட்டும் என்று ஒரு சிலர் மட்டும் எடுத்த பள்ளிக் கால நிழல்படங்கள்…

இடமிருந்து  வலமாக எல்லா நண்பர்களையும் அறிமுக படுத்துகிறேன்…

சயனைடு சண்முகநாதன், நிரூபன், நசீர், தவசிபால், ஜெகன் …

சங்கர் ,டல்ஹௌசி பிரபு, தவசிபால், பிரவீன் குமரன், சண்முகநாதன்…

இவங்க யாருன்னு உங்களுக்கே தெரியும்…

((ஐயா, இவுரு  தான் மாப்புள்ள.. ஆனா இவுரு போட்டுருகுற ட்ரஸ் என்னோடது இல்ல))…

விக்னேஷ்


 பழமை மாறாத பள்ளியின் பந்தம் ரத்தம் போன்றது ; இறப்பின் போதே இழக்க நேரிடும் …

 

மறவாத வாக்கியங்கள் …

 எல்லோருடைய  பள்ளிப்  பயணங்களிலும் மறக்க முடியாதபடி சில வாக்கியங்கள் , வார்த்தைகள் அல்லது பட்டப் பெயர்கள் அவரவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திடிருக்கும்.

நெடுநாள் பிரிந்திருந்த நட்பின் பெயர் கூட மறந்து விடலாம். ஆனால் பட்டப் பெயர்கள் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் போன்றவற்றை மறக்கவே முடியாது ..

அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது ஆசிரியர்களின் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் தான் …

(( திசையன்விளை ஸ்ரீ ராம கிருஷ்ணா மேல் நிலை பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்… மற்றவர்கள் உங்கள் பள்ளி வாழ்க்கையை  சற்று நினைவு படுத்திக்கொள்ளுங்கள் ))

 இதோ என் பள்ளி பயணங்களில் என்னால் , என்னால் மட்டுமல்ல என் பள்ளி தோழர்களாலும்
மறக்க முடியாத சில ஆசிரியர்களின் வாக்கியங்கள் :::

வீட்டுப் பாடம்(home work) செய்து வராத  மாணவர்களை பார்த்து எங்கள் கணித ஆசிரியை கூறும் வாக்கியம் :
“”உங்களயெல்லா அடிச்சி கொல்லனுங்கிறே. உங்க மண்டையெல்லா அடிச்சி ஒடைகனுங்கிறே“”

சமூக அறிவியல் பாடத்தில் நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை மிரட்ட எங்கள் சமூக அறிவியல் ஆசிரியர் கூறும் வாக்கியம் :
“”(இடது கையை காட்டி) இந்த கை’ல  அடிச்சா இந்த கை பன் மாரி(மாதிரி) போம்மிக்கும்.
(வலது கையை காட்டி) இந்த கை’ல  அடிச்சா இந்த கை பன் மாரி(மாதிரி) போம்மிக்கும்… மொத்ததுல ரெண்டு கையும் உப்பிக்கும்.“”

தமிழ் ஆசிரியை பாடம் நடத்தியபடி {[ வகுப்பு முடிவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு தான் பாடத்தை நடத்த ஆரம்பிக்கும் நல்ல ஆசிரியை, முதல் 40 நிமிடம் பக்கத்துக்கு வீட்டு அக்க கதை ]} கூறும் வார்த்தை “” சரியாபோவ் “”( சரி தானே ).
மேலும் ,
ஆவேசத்தில் கூறும் வார்த்தை “” நா யாருக்கும் பயப்பட மாட்டேன். என் வழி தனி வழி“” ( Braveen Commend : ஆமா , போஸ்ட் ஆபீசிக்கு போற வழி )

இயற்பியல் ஆசிரியர் கூறுவது “” சொக்கே , சொக்கணுவ “”( That means God Siva )

கணிபொறி ஆசிரியை அடிக்கடி அடிக்கடி அடிக்கடி கூறும் வார்த்தை “” ச்ஸோஒ… ““( Special Thanks to Voice Expert Vicky )

முக்கியமான ஒன்னு இத நா சொல்லியே ஆகணும் ….

எங்கள் அறிவியல் ஆசிரியை பாடம் நடத்தும் போது கனவு காணும் மாணவர்களை பிடித்து கேட்கும் கேள்வி :
“”உன் மனச தொட்டு சொல்லு , நீ என்ன நனைச்சிகிட்டு இருந்தா ?“”
அல்லது ( சுவற்றில் தொங்க விடப்பட்ட இறைவனின் படத்தை காட்டி )
“”இந்த படத்த பார்த்து சொல்லு, நீ என்ன நனைச்சிகிட்டு இருந்தா ?“”

 சரி , ஆசிரியர்களின் காமெடியை விடுவோம்,
மாணவர்களின் அரட்டைக்கு வருவோம் …

“”ஆழியாலா..ஆ… சின் குன் கா ..ஆ…. யங், மங், சங்…“”

என்ன ஒன்னுமே புரியலையா…எனக்கு புரியல தான். ஆனா என் கூட படிச்சா எல்லாருக்கும் இந்த  வாக்கியம் அத்துபடி… இது ஒரு சீன படத்துல வர்ற வசனம். எங்கிருந்தோ வந்த ஒரு இரும்பு கம்பி, மாடியில் நின்று கொண்டிருக்கும் ஒருவனின் தலையில் விழுந்தவுடன் தலை சுற்றியபடி கூறும் வசனம் …இதை பார்த்து விட்டு பள்ளிக்கு வந்து இந்த வசனத்தை பிரபலபடுத்தியது பரம்ஸ் என்கிற பரமலிங்கம் …

நண்பன் கேசவனை சமூக அறிவியல் ஆசிரியர் அழைக்கும் விதம் தான் இது :
“”கேசவா நாராயணா கோவிந்தா கோ…விந்தா “” …

கேசவன் என்று அழைப்பதை விட இது தான் நல்ல இருக்கு …

சைனைட் என்ற சண்முக நாதன் .
சின்ன டப்பா பிரவீன் .
Legend killer , Bond killer , நமிதா தொப்பை ,இறைப்புவாரி, இடிதாங்கி , அலி , எர்  குட்ட , உருண்ட (( உருண்ட வருது, உருண்ட வருது, உருண்ட பாருங்கோ  )), மொட்ட … என்று  பல பெயர்களை மறக்க முடியாது …

வாழ்கையின் எல்லை வரை வரும் பள்ளிப் பயணங்களின்  நினைவுகளுக்கு சமர்பிக்கிறேன்… I Miss My school Friends a Lot…! I miss you Guys…

தொடர்பில் இல்லாத தோழமைகள் உங்கள் செல்பேசி எண்ணை உங்கள் பெயருடன் எனக்கு அனுப்பவும்…நட்புக்குள் பிரிவுகள் தேவை இல்லை …